தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? இல்லையா?

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? இல்லையா?

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை

நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானம் இன்று (10) எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் எதிர்வரும் 13ம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் கொவிட்-19 தடுப்புக்கான செயலணி இன்று கூடவுள்ளது.

இந்த கூட்டத்திலேயே, தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

13ம் திகதியுடன் ஊரடங்கு தளர்த்தப்படுமாக இருந்தால், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image