இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்சினால் சுகாதார அமைச்சரிடம் இவை உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கையில்,
இவை, கொவெக்ஸ் (COVAX) திட்டத்தின் கீழ் அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன..
இந்த வருட இறுதிக்குள் நாட்டு மக்களுக்கு 2 தடுப்பூசிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆகஸ்ட் 26 ஆம் திகதியளவில் சனத்தொகையின் 25 வீதமானோருக்கு இரு தடுப்பூசிகளையும் வழங்க முடிந்ததாகவும் தெரிவித்தார்.