ஆசிரியர், அதிபர் சங்கங்களுக்கும், அமைச்சரவை உப குழுவுக்கும் இடையிலான சந்திப்பு பிற்போடப்பட்டது

ஆசிரியர், அதிபர் சங்கங்களுக்கும், அமைச்சரவை உப குழுவுக்கும் இடையிலான  சந்திப்பு பிற்போடப்பட்டது

ஆசிரியர், அதிபர் சங்கங்களுக்கும், அமைச்சரவை உப குழுவுக்கும் இடையில் இன்று இடம்பெறவிருந்த சந்திப்பு, பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

 
ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பது குறித்து ஆராய்வதற்காக, இந்த அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.
 
இரு தரப்பினருக்கும் இடையில் இன்று சந்திப்பு நடைபெற இருந்த நிலையில், அது நாளை மாலை வரை பிற்போடப்பட்டுள்ளதென நேற்று தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இன்று அமைச்சரவை கூட்டம் இடம்பெற உள்ளதால் இந்த சந்திப்பு பிற்போடப்பட்டதாக தங்களுக்கு அறிவிக்கப்பட்டது என்றும் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயம் தொடர்ந்து நீடித்துக் கொண்டே செல்கின்றது.  அரசாங்கம் இந்த விடயத்தில் முறையாக செயல்படாவிட்டால் இந்த பிரச்சினை நீடித்துக்கொண்டே செல்லும். 
 
எவ்வாறிருப்பினும், தங்களது போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும்,  இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரும் பொறுப்பு அரசாங்கத்தின் கைகளிலேயே உள்ளதாகவும் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image