ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகளின் தகவல்கள் இணையவழியில் சேகரிப்பு

ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகளின் தகவல்கள் இணையவழியில் சேகரிப்பு
வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டம் 2020 இல் இணையவழி முறையில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பான அறிவித்தலை அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
 
01. இந்தத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள பட்டதாரி பயிலுனர்களிடமிருந்து அவசியப்படும் தகவல்களை பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக இணையவழி மென்பொருளுக்கு 2021.08.13 ஆம் திகதி கீழ்வரும் இணைப்பு (Link) இன் மூலம் பிரவேசித்து (Login) செய்து தகவல்களை உள்ளீடு செய்தல் வேண்டும் என அமைச்சு அறிவித்துள்ளது.
 
 
இணைப்பு 02
 

இணைப்பு 03

இணைப்பு 04

02. ஒவ்வொரு பயிலுனர் உத்தியோகத்தரும் இந்த இணைப்புகளுக்கு பிரவேசித்து தரவுகளை உள்ளீடு செய்வதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள கால அளவு ஒன்றில் காட்டப்பட்டுள்ளது. குறித்த திகதியினுள் இணையவழி மென்பொருளினுள்  பிரவேசிக்க முடியாதுபோகும் பயிலுநர்களுக்கு சிறிது காலத்தின் பின்னர் மற்றொரு திகதியை வழங்க முடியும்.
 
03. அரச நிறுவனங்களில் பயிற்சி பெற்றுவரும் கிட்டத்தட்ட 60,000 பட்டதாரி பயிலுனர்களின் தகவல்களுடன் அவர்களின் நடவடிக்கைகளை இலகுபடுத்தும் வகையில் இச்செயற்பாடு இடம்பெறுவதனால் எல்லா பட்டதாரி பயிலுனர்களும் தமது தகவல்களை உள்ளீடு செய்தல் வேண்டும்.
 
பயனர்பெயர் (Username)  கடவுச்சொல் (Password)
 
* தாங்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும்போது தங்களால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை இலக்கம் பயனர் பெயராக காணப்படும். உதாரணம் 791234567v அல்லது 197912340567
 
* முதலில் REQ எனக் குறிப்பிட்டு தாங்கள் ஏற்கனவே பொது சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியமன இலக்கத்தின் இறுதி இலக்கம் மூன்றினை முதலிலும், தாங்களால் மேற்படி பயனர் பெயராக குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் இறுதி இலக்கம் 3 இனை இரண்டாவதாகவும் எடுத்துக் கொண்டால் உங்கள் கடவுச்சொல் உருவாகும்.
 
உதாரணம்
 
நியமன இலக்கம் -COL-01-00210
 
தே.அ.இ - 791234567v
 
கடவுச்சொல் - REQ_210587
 
* விண்ணப்பத்தை நிரப்பும்போது சிங்களம் / தமிழ் எழுத்துக்களை தட்டச்சு செய்கையில் Unicode Font  பயன்படுத்துங்கள்.
 
அமைச்சின் முழுமையான அறிவித்தல் இந்த இணைப்பில்
 
link.png

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image