வீட்டுப் பணிப்பெண்ணான சிறுமியின் சடலம் மீள தோண்டி எடுக்கப்படுகிறது

வீட்டுப் பணிப்பெண்ணான சிறுமியின் சடலம் மீள தோண்டி எடுக்கப்படுகிறது

முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில், தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்த டயகம பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்படுகிறது.

குறித்த சடலத்தை தனிமைப்படுத்தல் நெறிமுறைகளுக்கு அமைவாக தோண்டி எடுத்து, பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கில், நேற்று கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினால் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.

சிறுமியின் சடலத்தை புதைத்த இடத்தில் இருந்து தோண்டி எடுப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்ற விடயத்தை காவற்துறையினர் நேற்று நுவரெலியா நீதவானுக்குத் தெரியப்படுத்தினர்.

அத்துடன் நுவரெலியா நீதவானின் கண்காணிப்பில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரியப்படுத்தப்பட்டது.

விடயங்களை ஆராய்ந்த நீதவான் லக்சிகா குமாரி ஜயரத்ன, விசேட வைத்திய குழுவின் முன்னிலையில் இன்று காலை 8.30 அளவில் சிறுமியின் சடலத்தை தோண்டி எடுக்க உத்தரவிட்டார்.

பின்னர் பொலிஸ் பாதுகாப்புடன் சடலத்தை பேராதனை போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறும் அவர் கட்டளை பிறப்பித்தார்.

சிறுமினியின் சடலத்தை மீளத் தோண்டி, இரண்டாம் பிரேத பரிசோதனையை மேற்கொள்வதற்காக விசேட வைத்திய அதிகாரிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட வைத்திய விஞ்ஞானப்பிரிவின் பேராசிரியர் ஜீன் பெரேராh தலைமையில் 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு இன்றையதினம் தினம் டயகம பகுதிக்கு சென்று, அங்கு புதைக்கப்பட்டுள்ள சிறுமியின் சடலத்தை மீளத் தோண்டி எடுக்கும் பணிகளை முன்னெக்க உள்ளது.

இதன்போது துறைசார்ந்த நிபுணர்கள் பலர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

சிறுமியின் சடலம் மீளத்தோண்டப்பட்டு அவர் மரணித்த விதம், துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை, அசம்பாவிதம் இடம்பெற்ற காலகட்டம், சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டாரா? போன்ற பல விடயங்கள் குறித்து பரிசீலிக்கப்படவுள்ளது.

மூலம் - சூரியன எவ் எம் செய்திகள்

278385_14.jpg

278385_11.jpg

278385_6.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image