நாட்டில் கொவிட்-19 ஆல் மரணித்தோர் எண்ணிக்கை 10,000ஐ கடந்தது

நாட்டில் கொவிட்-19 ஆல் மரணித்தோர் எண்ணிக்கை 10,000ஐ கடந்தது

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ கடந்துள்ளது.

நாட்டில் மேலும் 189 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்தியதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,140 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 462,023 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 384,557 ஆக அதிகரித்துள்ளது.

67,515 பேர் வைத்தியசாலைகளிலும், சிகிச்சை மையங்களிலும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image