றிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த 11 பெண்களில் ஐவரிடம் வாக்குமூலங்கள்

றிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த 11 பெண்களில் ஐவரிடம் வாக்குமூலங்கள்

2010 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியூதீனின் வீட்டில் பணிப்புரிந்த 11 பெண்களில் ஐந்து பெண்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியூதீனின் வீட்டில் பணிப்புரிந்த 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக டயகம பகுதிக்கு சென்றுள்ள காவல்துறை குழுக்களினால் இந்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்னும், ஐந்து பெண்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியூதீனின் வீட்டில் பயணியாற்றிய நிலையில், தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணித்த 16 வயதான சிறுமியின் மரணம் தொடர்பில் நியமிக்கப்பட்ட இரண்டு பொலிஸ் குழுக்கள் இன்றைய தினமும் ஹட்டன் - டயகம பகுதியில் விசாரணைகளை முன்னெடுக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியூதீனின் வீட்டில் தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணித்த சிறுமியின் சரீரத்தை மீளத் தோண்டி, இரண்டாம் பிரேத பரிசோதனையை மேற்கொள்வதற்காக விசேட வைத்திய அதிகாரிகள் குழு ஒன்று நேற்று நியமிக்கப்பட்டது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட வைத்திய விஞ்ஞானப்பிரிவின் பேராசிரியர் ஜீன் பெரேராh தலைமையில் 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு நாளைய தினம் டயகம பகுதிக்கு சென்று, அங்கு புதைக்கப்பட்டுள்ள ஹிஷாலினியின் சரீரத்தை மீளத் தோண்டி எடுக்கவுள்ளது.

இதன்போது துறைசார்ந்த நிபுணர்கள் பலர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

சிறுமியின் சரீரம் மீளத்தோண்டப்பட்டு அவர் மரணித்த விதம், துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை, அசம்பாவிதம் இடம்பெற்ற காலகட்டம், சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டாரா போன்ற பல விடயங்கள் குறித்து பரிசீலிக்கப்படவுள்ளது.

மூலம் - சூரியன் எவ் எம் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image