அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10,000 ரூபாவால் அதிகரிப்பு

அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10,000 ரூபாவால் அதிகரிப்பு

அரச ஊழியர்களின் வாழக்கைச் செலவு கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வலுவான எதிர்காலத்திற்கான முன்னுரை என்ற தொனிப்பொருளின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (13) பாராளுமன்றத்தில் சமர்பித்தார்.

அரச ஊழியர்களுக்கு 2015 ஆம் ஆண்டின் பின்னர் சம்பள அதிகரிப்புக் கிடைக்கவில்லை. இதனால் அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டத்தில் சமநிலை பாதிக்கப்படாத நிலையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நான் முன்மொழிகின்றேன்.

தற்பொழுது அரச ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 1.3 மில்லியன் (1,300,000) ஆகும். அவர்களது குடும்ப அங்கத்தவர்ளது மொத்த எண்ணிக்கை 5 மில்லியனுக்கு அதிகமாகும். இந்த அரச ஊழியர்களுக்கு தற்பொழுது கிடைப்பது ரூபா 7,800 மாதாந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு மாத்திரமாகும். நாம் 2024 ஜனவரி முதல் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவினை ரூபா 17,800 வரை அதிகரிப்போம்.

திறைசேரிக்கு குறித்த வருடத்திற்குரிய வருமானம் கிடைக்க ஆரம்பிப்பது பெப்ரவரி, மார்ச் மாதங்களின் போதாகும்.

எனவே, இக்கொடுப்பனவு அதிகரிப்பினை மாதாந்த சம்பளத்திற்கு சேர்த்துக்கொள்வது ஏப்ரல் மாதத்திலிருந்தாகும்.

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான நிலுவைத் தொகையினை ஒக்தோபர் மாதத்திலிருந்து தவணை அடிப்படையில் ஆறு மாதங்களுக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image