1,000 ரூபா சம்பள உயர்வுக்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு

1,000 ரூபா சம்பள உயர்வுக்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு

தேயிலை மற்றும் இறப்பர் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறுகோரி பெருந்தோட்ட நிறுவனங்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தாணை மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அக்கரபத்தனை, எல்பிட்டி உள்ளிட்ட 20 பெருந்தோட்ட நிறுவனங்களால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்ரகீர்த்தி, சம்பள நிர்ணய சபை தவிசாளர் உள்ளிட்ட 18 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த மனு, கடந்த 22ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த மனுவை இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீரமானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image