கல்வித்துறை மறுசீரமைப்பு: 0/L, A/L பரீட்சைகள் MBBS தொடர்பில் GMOA பரிந்துரை

கல்விக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்பு குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தங்களது பரிந்துரைகள் அடங்கிய வழிகாட்டியை வெளியிட்டுள்ளது.

கொழும்பில் நேற்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், சங்கத்தின் மத்தியக்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்டை மற்றும் உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் காலம் குறித்தும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இணையத்தளத்தில் மும்மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் தங்களது முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்க முடியும் என்றும், அதன்மூலம், தங்களது பரிந்துரைகளை மேலும் சீராக்கி அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்க முடியும் என்றும் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விளக்கமறிக்கும் காணொளி மேலே இணைக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image