வேலைத்தளங்களில் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் - சட்டத்தின் பாதுகாப்பும்

வேலைத்தளத்தில் ஊழியர்கள் பெரும்பாலும் தொழிலாளர்  பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பது பொதுவான நிலையாக இருக்கின்ற நிலையில், ஏதாவது ஒரு வகையில் தொழில் சட்டம் மற்றும் நிவாரணத்தை பெற்றுக் கொள்ளும் முறைமை தொடர்பில் அறிந்திராதமையினால் அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஊழியர்களுக்கு உரித்தான நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமைகளும் உள்ளன.

 

எவ்வாறிருப்பினும், பெரும்பாலான ஊழியர்கள் தொழிலாளர் சட்டத்தையும், தொழிலாளர் என்ற அடிப்படையில் அவர்களுக்கு உரித்தான நிவாரணத்தையும் பெற்றுக்கொள்வது தொடர்பில் அறிந்திராதமையினால் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்கின்றதை தவிர்ப்பதற்காக உதவும்  வகையில், வேலைத்தளங்களில் பொதுவாக தொழிலாளர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் தொடர்பான  விளக்கங்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.  

இதற்கு அமைவான ஒரு தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது. 

நீங்கள் ஏதாவது தொழிலாளர் தொடர்பான பிரச்சினைக்கு முகம்கொடுத்திருந்தால் என்ற இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். எமது மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது பிரச்சினைகளை எழுதி அனுப்புங்கள்.

01 கேள்வி

இலங்கையில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய அனர்தத்தினை தடுப்பதற்காக பணியாளர்கள் மற்றும் தொழில்தருனர்களால் பின்பற்ற வேண்டிய சட்டம் என்ன?

பதில்:

குறிப்பாக எமது நாட்டின் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் திடீர் அனர்த்ததிற்கு முகம் கொடுப்பது அடிக்கடி அறியப்படும் ஒரு நிகழ்வாகும்.


அது தொடர்பில் பணியாளர்கள் மற்றும் தொழில்தருனர்கள் இரு தரப்பினர்களாலும் பின்பற்ற வேண்டிய ஆலோசனைகள் அடங்கிய சட்டக்கோவை. 1942 ஆம் ஆண்டு 45 இலக்க தொழிற்சாலை கட்டளை சட்டம். இந்த சட்டம் தொழில் ஆணையாளரின் அதிகாரத்தின் கீழ் அமுல்படுத்தப்படுவதோடு, அதனை செயற்படுத்துவதற்காக தொழிலாளர் திணைக்களத்தினுள் தொழிற்சாலை பிரிவு என்ற பெயரில் விசேட பிரிவும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் ஊடாக தொழிற்சாலை கட்டளை சட்டத்தில் உள்ள சட்ட விதிகளை அமுல்படுத்துதல், திடீர் அனர்த்தகங்களை தடுப்பது தொடர்பில் பணியாளர்கள் மற்றும் தொழில்தருனர்களுக்கும் அறிவுறுத்தல், அது குறித்து பிரசாரங்களை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தொழிற்சாலை கட்டளை சட்டம் அமுலாவதானது, அந்த சட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளாக வரையறுக்கப்பட்டுள்ள இடத்தில் மாத்திரம் ஆகும்.

அதாவது ஒரு இடத்தில் அதாவது திறந்தவெளி அல்லது கட்டிடத்தினுள் பணியாளர்களை பயன்படுத்தி எதேனும் பொருளை அல்லது அதன் ஒரு பகுதியை உற்பத்தி செய்தல் அல்லது சுத்தம் செய்தல் அல்லது கழுவுதல் அல்லது மெருகூட்டுதல் அல்லது பகுதி பகுதியாக பிரித்தல் அல்லது அவ்வாறின்றி இறைச்சிக்காக விலங்குளை கொல்லுதல் அல்லது தரித்து வைத்தல் போன்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டால் அந்த இடம் தொழிற்சாலை ஆகும்.

அதற்கு மேலதிகமாக மின் உற்பத்தி இடம், கப்பல் இறங்குதுறை, கப்பல் பொருட்களை ஏற்றுதல் - இறக்கும் தளம், கட்டிடம் மற்றும் பொறியியல் நிர்மாண தளங்கள் ஆகியவையும் விசேட சட்டவிதிகளின் கீழ் தொழிற்சாலையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது பணியாளர்களுக்கு பணியிடத்தில் அனர்த்தங்களை தடுப்பது தொடர்பில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளாவன,

01. பணியாளர்கள் தமக்கு அல்லது தம்முடன் பணிபுரியும் ஏனைய பணியாளர்களுக்கு அனர்த்தம் ஏற்படும் வகையில் உள்நோக்கத்துடன் எதனையும் செய்ய கூடாது.

02. இயந்திரத்தை இயக்கும் போது ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தடுப்பது குறித்து உரிய ஆலோசனை அல்லது உரிய பயிற்சியின்றி இயந்திரத்தை இயக்க செல்லாமல் இருத்தல் வேண்டும்

03. இயந்திரம் இயங்கும் போது பெண்கள் மற்றும் சிறு பராயத்தினரும் சுத்தம் செய்ய செல்லாதிருக்க வேண்டும்.

அத்துடன் சிறு பராயத்தினருக்கு அனர்த்தம் ஏற்படக்கூடிய பளு தூக்கும் பணியில் ஈடுபடுத்த கூடாது.

04. தொழிற்சாலைகளில் மின்சாரம் பயன்படுத்தப்பட்டால், அது தொழிலாளர்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும்.

அத்துடன் இயல்பான சூழ்நிலையில் பணியாளர்களுக்கு அனர்த்தம் ஏற்படாத வகையில் அதிக சத்தம், வெப்பம் பணிகளுக்காக பயன்படுத்த வேண்டாம். எந்நேரமும் சுத்தமான சூழல் கிடைக்கும் வகையில் நிறுவனத்தை பராமரிக்க வேண்டும்.

அதற்கு மேலதிகமாக தொழில்தருனர்களால் பின்பற்றப்பட வேண்டிய சட்டவிதிகளாவன,

01. நிறுவனத்தினுள் ஏற்படும் திடீர் அனர்த்தங்களை மாவட்ட தொழிற்சாலை ஆய்வு பொறியியலாளருக்கு அறிக்கையிட வேண்டும்.

02. தொழிற்சாலையினுள் ஏற்படும் அனர்த்த சம்பவங்கள், கட்டிடம் இடிந்து வீழ்தல், பளுதூக்கி உடைந்து வீழ்தல், வெடிப்பு போன்றவை மாவட்ட தொழிற்சாலை ஆய்வு பொறியியலாளருக்கு அறிக்கையிட வேண்டும்.


03. தொழிற்சாலையினுள் பணியிட சூழ்நிலையால் பணியாளர்கள் தொழில் ரீதியான நோய்நிலைக்கு உள்ளானால் அவற்றையும் மாவட்ட தொழிற்சாலை ஆய்வு பொறியியலாளருக்கு அறிவிக்க வேண்டும்.

02. கேள்வி

தொழிற்சாலையில் பணியாளர்கள் பயன்படுத்தும் ஆபத்தான உபகரணங்களை ஆய்வு செய்யும் பொறியியலாளர், உரிய முறையில் ஆய்வு செய்யாமை மற்றும் உரிய வகையில் அறிக்கையிடாமையின்போது பொறியியலாளர் அல்லது குறித்த பரிசோதகருக்கு எதிராக இருக்கும் சட்ட நிலைப்பாடு என்ன?

பதில்

அனர்த்தம் ஏற்பட்ட தொழிற்சாலையில் முன்னெடுக்கப்படும் ஆய்வுகளின் போது, அந்த ஆய்வினை மேற்கொள்ளும் பிரதான பொறியியலாளரால் 28 நாட்களுக்குள் அதன் அறிக்கையின் பிரதியை மாவட்ட ஆய்வாளருக்கு அனுப்ப வேண்டும் என்பதோடு, அந்த ஆய்வு மேற்கொள்ளப்படாவிடின் அல்லது உண்மைக்கு புறம்பான அறிக்கை அல்லது அத்தியாவசியமாக இருக்க வேண்டிய தகவல்களை குறைத்து பதிவிட்டு அறிக்கையிட்டால் அந்த நபர் அல்லது பொறியிலாளருக்கு 1988 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க தொழிற்சாலை திருத்த சட்டத்தின் 12 ஆவது சரத்திற்கு அமைய குற்றவாளியாக கருதப்பட்டால் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் 25,000 ரூபாய்க்கு மிகையாகாத அபராதம் விதிக்க முடியும்.

03. கேள்வி

18 வயதிற்கு குறைந்த பிள்ளைகளை ஆபத்தான பணிகளில் அமர்த்துவது தொடர்பில் சட்டத்தின் நிலைப்பாடு என்ன?

பதில்


1956 ஆம் ஆண்டு 47 ஆம் இலக்க பெண்கள், இளம் பராயத்தினரை மற்றும் பிள்ளைகளை பணியில் அமர்த்தும் சட்டத்தில் 24 ஆம் இலக்க திருத்தத்திற்கு அமைய மாத்திரம் 20 (அ) சரத்தின் கீழ் 18 வயதிற்கு குறைவான எவரையும் ஆபத்தான வேலைகள் மற்றும் வேலையில் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

18 வயதிற்கு உட்பட்ட நபர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் 50 இற்கும் மேற்பட்ட தொழில்கள் அபாயகரமான தொழில்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இறைச்சி, மீன், உப்பு, இரசாயன பொருட்கள, கிருமி நாசினி, வானவேடிக்கை, மதுபானம், புகையிலை, றப்பர், தொகுத்தல், இயந்திரங்கள்,துறைமுகம், சுரங்கம், குவாரி, மணல், ஓடு, செங்கல், சுண்ணாம்புக்கல், கண்ணாடி, கனிம பொருட்கள், பித்தளை வேலை, நிர்மணம், வேலைத்தளம், போக்குவரத்து, சுற்றுலா, மரம் ஏறுதல், மரம் வெட்டுதல், விரகு வெட்டுதல், ஆயத போர், பாதுகாப்பு சேவை, கழிவகற்றல், இறந்தவர்களின் போக்குவரத்து, ஆடை, தைத்த ஆடை, ஆபத்தான விளையாட்டு, இரவு வேலை, ஆகியவை அந்த தொழில்களில் சிலவாகும்.

அத்துடன் இவ்வாறு 18 வயதற்கு குறைவான இளம் பராயத்தினரை பணிக்கு அமர்த்தும் தொழில்தருனருக்கு எதிராக நீதவான் நீதிமன்றின் முன்னிலையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் குற்றவாளியானால் 10,000 ரூபாவிற்கு மிகையாகாதா அபராதம் அல்லது 12 மாதங்களுக்கு மேற்படாத காலத்திற்கு இரண்டு விதங்களில் ஒரு விதத்தில் சிறையில் அடைத்தல் அல்லது அபராதம் மற்றும் சிறையில் அடைத்ததல் ஆகிய இரண்டிற்கும் உட்படுத்த முடியும்.

04. கேள்வி

பணியாளர் ஒருவர் சேவை நிறைவடைந்து அல்லது சேவையில் இருந்து விலகும் போது வழங்கப்படும் பணிக்கொடை என்ன?

பதில்


ஒரு நிறுவனத்தினால் பணிக்கொடை வழங்குவது தொடர்பில் 1983 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க பணிக்கொடை சட்டமே நாட்டில் அமுலில் உள்ள சட்டமாகும். இந்த சட்டத்தின் கீழ் 15 பணியாளர்கள் அல்லது அதற்கு அதிகளவான பணியாளர்களை பயன்படுத்தும் நிறுவனத்தின் தொழில்தருனரால் 5 வருடங்கள் சேவை காலத்தை நிறைவு செய்த பணியாளர் ஒருவருக்கு சேவையில் இருந்து விலகி செல்லும்போது ஒவ்வொரு சேவை நிறைவடைந்த வருடங்களுக்கும் 1/2 (அரைவாசி) மாத சம்பளம் என்ற அடிப்படையில் குறித்த வருடங்களுக்கு செலுத்த வேண்டும்.
பணியாளர் இறுதியாக பெற்ற சம்பளத்தின் அடிப்பமையில் அதனை கணக்கிட வேண்டும்.

இந்த பணிக்கொடை கொடுப்பனவு பணியாளர் சேவையில் இருந்து விலகி 30 நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும்.ஏதேனும் காரணத்தால் அந்த காலப்பகுதியில் அதனை செலுத்த தவறினால் அல்லது தவிர்த்தால் அந்த பணத்திற்கு அபராதமாக மேலதிக பணமும் செலுத்தப்பட வேண்டும்.
செலுத்தப்படும் காலம் தாமதமாவதற்கு அமைய கூடுதல் கட்டணமும் படிப்படியாக அதிகரிக்கும். கூடுதல் கட்டணம் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்கும் கால தாமதத்திற்கு தொழில்தருனர் செலுத்த வேண்டும்.

இந்த பணிக்கொடை கொடுப்பனவை தொழில்தருனர் குறைக்க கூடிய செலவுகள் உள்ளன.

01. தொழில்தருணரின் பணத்தினை முறைக்கேடாக பயன்படுத்தியிருந்தால்

02. தொழில்தருணரின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியிருந்தால்.

பதிவு - சட்ட அதிகாரி - லிலந்தி குமாரி

வெடபிம - வேலைத்தளம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image