சவுதி அரேபியாவில் 30 பெண் ரயில் சாரதிகள் தொழில்வாய்ப்புக்காக, 28 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தொடருந்து நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தப் பணிக்கான தேர்வில் வெற்றிபெறுபவர்கள், ஒரு வருட பயிற்சியின் பின்னர், மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு இடையே, அதிவேக ரயில்களை இயக்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியால், இதுபோன்ற பணிக்கு பெண்களைத் தெரிவுசெய்வதற்காக விளம்பரப்படுத்தப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
பல தசாப்தங்களாக, சவுதி அரேபியா உலகில் மிகக் குறைந்த பெண் தொழிற்படையைக் கொண்டிருந்த நாடாக இருந்தது.
எனினும், கடந்த ஆண்டுகளில், இளவரசர் மொஹமட் பின் சல்மானின் (ஆழாயஅஅநன டிin ளுயடஅயn) எண்ணெய்சார் பொருளாதாரத்தை பன்முகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, தொழில் செய்யும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சவுதி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடையை முடிவுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட சமூக சீர்திருத்தங்கள் இதன்மூலம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.