மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் மகளிர் தின நிகழ்வு
மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு 12.03.2022 அன்று அட்டனில் நடைபெற்றது.
மலையக பெண்களின் வீடு மற்றும் வாழ்வாதாரத்திற்கான காணி உரிமையை உறுதி செய்வோம் என்ற தொனிப்பொருளில் இந்த மகளிர் தின நிகழ்வு இடம்பெற்றது.
ஆயிரம் ரூபா சம்பளம் என்ற போர்வையில் நாங்கள் ஏமாற்றபட்டோம், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அரசு பொறுப்பு கூறலை உறுதிப்படுத்து, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நிவாரணத்தை பெற்று கொடு, மலையக பெண்களின் வாழ்வாதாராத்தினை பெற்று கொடு, என்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம், சிவப்பு கொடிகளையும் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்றனர்.
அட்டன் மல்லியப்பு சந்தியிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி அட்டன் கிருஷ்ண பகவான் மண்டபத்தை சென்றடைந்ததும் நிகழ்வுகள் ஆரம்பமாகியன.
இதற்கான ஏற்பாடுகளை மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் மகளிர் அணியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்வில் மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் பிரதான ஏற்பாட்டாளர் எஸ்.டி.கணேசலிங்கம், மகளிர் பிரிவிற்கான பொறுப்பளார் பி.புஷ்பலதா, பி. ரொஷானி, மொன்ரால் அமைப்பின் செயற்பட்டாளர் விமுக்தி த சில்வா, மலையக மகளிர் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது பெண்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.