குவைத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 49 பேர் பலி!

குவைத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 49 பேர் பலி!

குவைத்தின் அஹ்மதி கவர்னரேட்டில் உள்ள மங்காஃப் பிளாக்கில் உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 49 பேர் பலியாகினர்.

மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

புதன்கிழமை அதிகாலை 4:30 மணியளவில், கட்டிடத்தின் கீழ் தளம் ஒன்றில் உள்ள சமையலறையில் இருந்து தீ, வேகமாக மற்ற தளங்களுக்கும் பரவியது, பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image