சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 26 பேர் கைது

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 26 பேர் கைது

சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 26 பேர் யாழ்ப்பாணம் - வெற்றிலைக்கேணி பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது குறித்த 26 பேரும் கைதாகினர்.
 
அவர்கள், பூநகரி, ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.
 
கைதானவர்கள் மேலதிக விசாரணைக்களுக்காக யாழ்ப்பாணம் - மருதங்கேணி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image