24 மணிநேரமும் சேவையில் ஈடுபடும் குடிவரவு - குடியகல்வு திணைக்களம்

24 மணிநேரமும் சேவையில் ஈடுபடும் குடிவரவு - குடியகல்வு திணைக்களம்

குடிவரவு - குடியகல்வு திணைக்கள பிரதான அலுவலகத்தை 24 மணித்தியாலங்களும் திறந்துவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது.

நேற்றிரவு(18) முதல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம் 4000 கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

கொழும்பு கோட்டை முதல் பத்தரமுல்லை வரையில் இலங்கை போக்குவரத்து சபையின் இரவுநேர பஸ் சேவையை இன்று(19) முதல் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடவுச்சீட்டுக்கான அவசர தேவை கொண்டவர்கள் மாத்திரம் அலுவலகத்திற்கு வருகைதந்து அவற்றை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

தற்போது போதுமான கடவுச்சீட்டுகள் கையிருப்பில் உள்ளதால் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாதென அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் குடிவரவு - குடியகல்வு திணைக்கள அலுவலகத்தை புதிதாக திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image