இஸ்ரேலில் பராமரிப்புத் தொழிலுக்காக 22 பேருக்கு விமான பயணச்சீட்டு

இஸ்ரேலில் பராமரிப்புத் தொழிலுக்காக  22 பேருக்கு விமான பயணச்சீட்டு

இஸ்ரேலில் பராமரிப்புத் தொழிலுக்காக தகுதிபெற்ற 22 ஊழியர்களுக்கு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் நேற்று முன்தினம் (07) விமான பயணச்சீட்டுக்கள் வழங்கப்பட்டதுடன், இந்த ஆண்டு 241 பேர் இஸ்ரேலில் பராமரிப்பு தொழிலுக்காக  அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டில் இஸ்ரேலில் பராமரிப்பு பணிக்காக அனுப்பப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 241. இதில் 33 ஆண் தொழிலாளர்களும் 208 பெண் தொழிலாளர்களும் அடங்குகின்றனர். ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் தலா 13 தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டதுடன், மார்ச் மாதம் 12 தொழிலாளர்கள் அனுப்பப்பட்டனர். ஏப்ரல் மாதம் 39 தொழிலாளர்களும், மே மாதத்தில் 34 தொழிலாளர்களும் அனுப்பப்பட்டனர். ஜூன் மாதத்தில் 40 தொழிலாளர்களும் ஜூலை மாதத்தில்  51 தொழிலாளர்களும் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் மட்டும் 39 தொழிலாளர்கள் பராமரிப்பு பணிக்காக இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டனர்.

May be an image of 7 people and people studying

இஸ்ரேலில் பராமரிப்பு வேலைகளுக்கான பணியாளர்களை விரைவாக அனுப்புவது தொடர்பாக  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, கடந்த பெப்ரவரி மாதம் அந்நாட்டின் பீபா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கையிலிருந்து பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதை துரிதப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இதன் போது உறுதி தெரிவிக்கப்பட்டது. 

இதற்கமைவாக ஏப்ரல் மாதம் முதல் இஸ்ரேலில் பராமரிப்பு பணிகளுக்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கையை துரிதப்படுத்த முடிந்துள்ளது. இதுவரை 480 தொழிலாளர்கள் பராமரிப்பு தொழிலுக்காக இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

May be an image of text

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image