ஆட்கடத்தலுக்கு எதிரான சட்டம் குறித்து தூதரக அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு
ஆட்கடத்தலுக்கு எதிரான சட்டம் குறித்து தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு.
ஆட்கடத்தலுக்கு எதிரான சட்டம் மற்றும் புலம்பெயர் துறையில் கடவுச்சீட்டுகள் தொடர்பாக எழும் பிரச்சினைகள் மற்றும் புகார்கள் குறித்துஇ தூதரகங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்குஇ இணையவழி மூலம் அறிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சி பணியகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளர் பங்களிப்பை சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மஹேஷிகா சில்வா மற்றும் குடிவரவு திணைக்களத்தின் முகாமையாளர் (பயிற்சி மற்றும் அபிவிருத்தி) திரு.சமன் சந்திரசிறி ஆகியோர் வழங்கியதுடன், பணியகத்தின் சட்டப் பிரிவின் முகாமையாளர் திரு.ரொஹான் விஜேசேன அவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை வழிநடத்தினார்.