பிறப்பு, திருமணப்பதிவு, இறப்புச் சான்றிதழ்களுக்கான நிகழ்நிலை சான்றுறுதிப்படுத்தல் சேவை

பிறப்பு, திருமணப்பதிவு, இறப்புச் சான்றிதழ்களுக்கான நிகழ்நிலை சான்றுறுதிப்படுத்தல் சேவை

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பொதுமக்களுக்கான பிறப்பு, திருமணப்பதிவு மற்றும் இறப்புச் சான்றிதழ்களுக்கான நிகழ்நிலை சான்றுறுதிப்படுத்தல் சேவையை அறிமுகப்படுத்துகிறது

2024 செப்டம்பர் 2, அன்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு பிறப்பு, திருமணப்பதிவு மற்றும் இறப்புச் சான்றிதழ்களுக்கான நிகழ்நிலை சான்றுறுதிப்படுத்தல் சேவையின் தொடக்க விழாவை பதிவாளர் நாயகம் திணைக்களத்துடன் இணைந்து நிகழ்த்தியது.

இப்புதிய நிகழ்நிலை செயல்முறையின் மூலம், இலங்கை குடிமக்கள் தங்கள் பிறப்பு, திருமணபதிவு மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் சான்றுறுதிப்பாட்டிற்காக தூதரக விவகாரங்கள் பிரிவின் நிகழ்நிலை இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

சான்றுறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படுவதுடன், விண்ணப்பிப்பது அல்லது சான்றுறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களின் சேகரிப்பு ஆகியவற்றை நேரில் சமுகமழித்து மேற்கொள்ளும் தேவையை நீக்குகிறது.

இந்நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, வெளிநாட்டலுவலர்களுக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, அமைச்சுக்கான பதில் செயலாளர் ஷானிகா திஸாநாயக்க, பதிவாளர் நாயகம் சமந்த விஜயசிங்க, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, தூதரக அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் சிசிர சேனவிரத்ன மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி கருத்து தெரிவிக்கையில், பொதுமக்களுக்கான ஆவண அங்கீகார சேவைகளின் வினைத்திறன் மற்றும் பயானுறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு இலத்திரனியல் மயமாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பரீட்சைகள் திணைக்களத்துடன் இணைந்து க.பொ.த சா/த மற்றும் உ/த சான்றிதழ்களுக்கான இணையத்தள மெய்யுறுதிப்படுத்தலை ஆரம்பித்ததன் மூலம் அமைச்சின் இணையத்தளத்தின் ஆவண சான்றுறுதிப்படுத்தலுக்கான இப்பிரவேசமானது, இலத்திரனியல் மாற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்கும் எனக் குறிப்பிட்டார்.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு, திருமணப்பதிவு மற்றும் இறப்புச் சான்றிதழ்களுக்கான நிகழ்நிலை சான்றுறுதிப்பாட்டை அறிமுகப்படுத்தியமையானது, இலத்திரனியல் மயமாக்கல் செயல்பாட்டில் மற்றொரு முக்கிய முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது என்பதை அமைச்சர் எடுத்துரைத்தார். தூதரக விவகாரப் பிரிவினால் தினசரி சான்றுறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களில், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பிறப்பு, திருமணபதிவு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், அண்ணளவாக 55 சதவீதத்தை உள்ளடக்குகிறது என்பதும் குறிப்பிட்டுக் கூறப்பட்டது.

உள்ளூர் பல்கலைக்கழகங்கள், இலங்கை மருத்துவ சபை, இலங்கை காவல்துறை, மோட்டார் போக்குவரத்து திணைக்களம், மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு, நிறுவனங்களின் பதிவாளர் திணைக்களம், பிரிதானிய மன்றம் மற்றும் வர்த்தக சம்மேளனம் உட்பட்ட ஏனைய அரச அதிகார சபைகள் மற்றும் நிறுவனங்களில் இலத்திரனியல் ஆவண சான்றுறுதிப்படுத்தல் முறைமையொன்றை (e-DAS) ஒருங்கிணைப்பதன் மூலம், தூதரக அலுவல்கள் பிரிவானது, பொதுமக்களுக்கான ஆவண சான்றுறுதிப்படுத்தல் சேவைகளை திறம்பட வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

பிறப்பு, திருமணபதிவு மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நிகழ்நிலை சான்றுறுதிப்படுத்தல் நடைமுறைகள் பின்வருமாறு:

- வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடவும் மற்றும் வழங்கப்பட்ட இணையநுழைவாயில் மூலம் நிகழ்நிலை விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்: https://mfa.gov.lk/online-consular-services/

- விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதும், விண்ணப்பதாரர்கள் தேவையான பணம் செலுத்துவதற்கான இணைப்பைப் பெறுவார்கள். சான்றிதழ் உருவாக்கம் மற்றும் சான்றுறுதிப்படுத்தலுக்கான கட்டணத்தை இந்த இணைப்பின் மூலம் செலுத்த வேண்டும்.

- கொடுப்பனவிற்கான பரிவர்த்தனையை முடித்த பிறகு, சான்றுறுதிப்படுத்தப்பட்ட ஆவணம் (வாடிக்கையாளர் நகல்) விண்ணப்பதாரர் வழங்கிய முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பப்படும். வாடிக்கையாளர் நகல் தொடர்புடைய வெளிநாட்டு பணியகங்களின் தேவைக்கேற்ப சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இது தொடர்பிலான சகல விசாரணைகளுக்கும், அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவை 011-2338812 அல்லது 0112-446302 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். எனும் மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2024 செப்டம்பர் 04

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image