போலி விசாக்கள் மூலம் வௌிநாடு செல்ல முயன்ற நால்வர் கைது!
ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாயை தரகர் ஒருவரிடம் கொடுத்து மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட போலி கிரேக்க நாட்டு விசாக்களுடன் ஐரோப்பா செல்ல முற்பட்ட 4 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
குறித்த 4 பேரும் நேற்று பஹ்ரைன் வழியாக கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் 21 முதல் 47 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ள குறித்த 4 பேரும் விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மூலம் - சூரியன் செய்திகள்