புலம்பெயர் தொழிலாளர் பாதுகாப்பிற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்த விடயங்கள் அமைச்சரிடம் முன்வைப்பு

புலம்பெயர் தொழிலாளர் பாதுகாப்பிற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்த விடயங்கள் அமைச்சரிடம் முன்வைப்பு
வலுவான சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பைத் தயாரிப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக,
ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவி மற்றும் சர்வதேச தொழில் அமைப்பின் ஆதரவுடன் இந்தோனேசியாவில் ஆய்வுச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த பிரதிநிதிகள் குழு, தமது ஆய்வுகள் தொடர்பான விடயங்களை அமைச்சரிடம் விபரித்தனர்.
 
இந்தோனேசியாவின் செயல்பட்டுவரும் வலுவான சமூகப் பாதுகாப்பு அமைப்பு கட்டமைப்பு தொடர்பில் விளக்கமளித்த பிரதிகள் குழு, இந்தோனேசியாவில் முன்னெடுக்கப்படும் சமூகப் பாதுகாப்பு அமைப்பு முறையில் பணிபுரியும் மனித வளத்தில் 58 வீதமானவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியது.
 
இத்தொகை 99.2 மில்லியன் ஆவதுடன் இதில் ஓய்வூதியம் மற்றும் வேலையின்மை பாதுகாப்பு ஆகியவை அடங்கியுள்ளன. ஆறு மாதங்களுக்கும் மேலாக இந்தோனேசியாவில் பணிபுரியும் வெளிநாட்டினரை சமூக பாதுகாப்பு அமைப்பில் எவ்வாறு சேர்ப்பது என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
 
இந்தோனேசியாவின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட சமூக பாதுகாப்பு அமைப்பு மூலோபாய திட்டமிடல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு இடையே வலுவான ஒருங்கிணைப்பு நிரூபிக்கப்பட்டுள்ளமை எடுத்துக்காட்டப்பட்டுள்ளதாகவும் தூதுக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
 
சமூகப் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள வகையில் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் குறித்த விடயங்களும் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டன.
 
பன்முகத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் செயல்திறனை உறுதி செய்யும் கடுமையான முகாமைத்துவ நடைமுறைகள் மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகள் மூலமான செயல்பாடு தொடர்ச்சியாக எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பது பற்றியும் பிரதிநிதிகள் விளக்கமளித்தனர்..
 
ஆய்வுக் குழுவினால் கண்டறியப்பட்ட விடயங்கள் குறித்து மிகவும் ஆர்வங்காட்டிய அமைச்சர், விரிவான அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்குமாறு, அமைச்சின் செயலாள ருக்கு ஆலோசனை வழங்கினார்.
 
இது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சுச் செயலாளர்களுக்கு விளக்கமளிக்கவும் அமைச்சர் பரிந்துரைத்தார்.
 
விரிவான சமூகப் பாதுகாப்புப் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதில் ஜனாதிபதி தற்போது கவனம் செலுத்தியுள்ளதுடன், புதிய தொழில் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வேலையற்றோரின் நலன்கள் மற்றும் மகப்பேறு மற்றும் பணியிட விபத்துக்களுக்கான செயலூக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் செயற்பட்டு வருகின்றார்.
 
பாதுகாப்பான பணியாளர்களை உருவாக்குவதற்காக சர்வதேச தொழில் அமைப்பு, இந்தோனேஷியா மற்றும் ஜப்பான் அரசாங்கம் இந்த ஆய்வுச் சுற்றுப்பயணத்திற்கான வசதி செய்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image