வீசா காலத்தை மீறி இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி 7-14 நாட்களுக்கு 250 அமெரிக்க டொலர்களாகவும், 14 நாட்களுக்கு மேல் 500 அமெரிக்க டொலர்களாகவும் அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அபராதத்துடன், வீசா கட்டணமும் செலுத்தப்பட வேண்டும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் பிரிவு 23 (அத்தியாயம் 351) இன் கீழ் இந்த வர்த்தமானி பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆரம்ப வீசா காலாவதியான நாளிலிருந்து 7 நாட்களுக்குள் இலங்கையை விட்டு வெளியேறும் ஒருவர் புறப்படும் விமான நிலையத்தில் உரிய வீசா கட்டணத்தை செலுத்தாமல் இலங்கையை விட்டு வெளியேற முடியும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.