இஸ்ரேல் வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

இஸ்ரேல் வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

இஸ்ரேல் வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பூரண அனுசரணையுடன், இஸ்ரேலில் செவிலியர் Nurse வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி, அரச இலச்சினை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அரச இலச்சினை என்பவற்றை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட போலி ஆவணங்களை, இளைஞர்களுக்கு வழங்கி, இளைஞர்களை தவறாக வழிநடத்திய ஒருவர் பணியகத்தின் அதிகாரிகளினால் கடந்த 22 ஆம் திகதி பத்தரமுல்ல தியதமுல்ல பகுதியில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர், இஸ்ரேலில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி ஒருவரிடம் தலா 4 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொள்வதாக, பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, புலனாய்வு அதிகாரிகள் முறைப்பாட்டாளருடன் சென்று சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, அத்துரிகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த மற்றுமொருவர் இந்த மோசடிக்கு உதவியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய புலனாய்வு அதிகாரிகள் மற்றைய நபரை தியத உயன வளாகத்திற்கு வரவழைத்து கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இணையதளத்தில் இருந்து விண்ணப்பப்படிவங்கள் தரவிறக்கம் செய்யப்பட்டு, அதில் அரச இலச்சினை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இலச்சினை என்பவற்றை உள்ளடக்கி இந்த மோசடியை மேற்கொண்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது. அந்த இடத்தில் இருந்து போலியாக தயாரிக்கப்பட்ட 5 விண்ணப்பங்கள் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளன.

அதன்படி, இருவரையும் கைது செய்து, கடுவெல நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய பின்னர், இருவரையும் 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image