சியோலில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியைகளுக்கு கொரிய அரசாங்கத்திடமிருந்து நிதியுதவி

சியோலில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியைகளுக்கு கொரிய அரசாங்கத்திடமிருந்து நிதியுதவி

கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற ஹெலொவின் கொண்டாட்டத்தின் போது சன நெறிசலில் சிக்கி உயிரிழந்த கண்டி - உடதலவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த மொஹம்மட் ஜினாத்தின் இறுதி கிரிகைகளுக்காக அவரது குடும்பத்தாருக்கு நிதி உதவிகளை வழங்க கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான கொரிய தூதுவர் சன்துஷ் வொன்ஜின் ஜியோங் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கைக்கான கொரிய தூதுவர் சன்துஷ் வொன்ஜின் ஜியோங் ஆகியோருக்கிடையில் வியாழக்கிழமை (3) நடைபெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் தூதுவர், பிரதமரிடம் தெரிவித்தார்.

இதன் போது கொரியாவில் சியோல் நகரில் இடம்பெற்ற ஹெலொவின் கொண்டாட்டத்தின் போது சன நெறிசலில் சிக்கி உயிரிழந்த கண்டி - உடதலவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த மொஹம்மட் ஜினாத்திற்கு கொரிய அரசாங்கத்தின் சார்பில் தூதுவர் இரங்கலைத் தெரிவித்தார்.

உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு, மரண சடங்குகளுக்கான நிதி உதவியை வழங்குவதற்கு கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தூதுவர், பிரதமரிடம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் 156 பேர் உயிரிழந்ததோடு , இவர்களில் 6 பேர் வெளிநாட்டவர்களாவர். உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மீது கொரிய அரசாங்கம் காட்டும் அக்கறைக்கு தனது நன்றியைத் தெரிவித்த பிரதமர், சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் அனுதாபங்கள் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image