இத்தாலி வாழ் இலங்கையர்கள் இருநாடுகளின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு

இத்தாலி வாழ் இலங்கையர்கள் இருநாடுகளின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு

இலங்கைக்கான இத்தாலியின் தூதுவர் ரீட்டா கியுலியானா மனெல்லா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர்  ஜீ.எல். பீரிஸை  கடந்த 2ஆம் திகதி வெளிவிவகார அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

அண்மையில் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட அமைச்சர் பீரிஸுக்கு தூதுவர் தனது வாழ்த்துக்களைத்  தெரிவித்தார். அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை விரிவுபடுத்தும் வகைகயிலான இலங்கை மற்றும் இத்தாலிக்கு இடையேயான வலுவான, நட்புறவான, பரஸ்பரம் நன்மை பயக்கும் கூட்டாண்மையை அமைச்சர் பீரிஸ் பாராட்டினார். வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள், சுற்றுலா மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேலும் விரிவாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இரு நாடுகளினதும் பொருளாதார மற்றும் கலாச்சார செறிவூட்டலுக்கு இத்தாலியில் உள்ள இலங்கைச் சமூகத்தின்  நேர்மறையான பங்களிப்பையும், கி.பி. 1ஆம் நூற்றாண்டு முதல் இலங்கைக்கும் ரோமுக்கும் இடையே நிலவிய வலுவான இராஜதந்திர உறவுகளின் வரலாற்றையும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையின் பிராந்திய மற்றும் பல்தரப்பு ஈடுபாடுகள் குறித்து இத்தாலியத் தூதுவருக்கு அமைச்சர் பீரிஸ் விளக்கியதுடன், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில் நெருக்கமான உரையாடலையும் ஒத்துழைப்பையும் தொடர்வதற்கும்  இதன்போது ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

வெளிவிவகார அமைச்சு

கொழும்பு

2021 செப்டம்பர் 04

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image