15 மாதங்களின் பின்னர் டுபாய் விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 15 மாதங்களாக மூடப்பட்டிருந்த டுபாய் விமான நிலையத்தின் முனையம் 1 (Terminal 1) இந்த வாரம் திறக்கப்படவுள்ளது.
டுபாய் அரச ஊடக அலுவலகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இன்று இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 24ஆம் திகதி, டுபாய் விமான நிலையத்தின் முனையம் 1 திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முனையம் 1 வருடாந்தம் 18 மில்லியன் பயணிகளை கையாளக்கூடியது. சர்வதேச போக்குவரத்து மையமான இந்த விமான நிலையம், ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளை கையாளக்கூடியது.
டுபாய் விமான நிலையம் வழியாக பயணிகள் போக்குவரத்தை இந்த ஆண்டு 28 மில்லியனாக கையாள இலக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.