VAT வரி திருத்தச் சட்டமூலம் மீள சமர்ப்பிக்கப்படும் - ரஞ்சித் சியம்பலாபிட்டிய

VAT வரி திருத்தச் சட்டமூலம் மீள சமர்ப்பிக்கப்படும் - ரஞ்சித் சியம்பலாபிட்டிய

வற் வரி (Vat Tax) திருத்தச் சட்டமூலம் இன்று(11) மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளவுள்ளதாக அவர் அறிக்கையொன்றினூடாக கூறியுள்ளார்.

குறித்த சட்டமூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் பொருட்கள் தொடர்பான பட்டியல் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

குறித்த பொருட்கள் பட்டியலை கோரி எதிர்க்கட்சியினர் இன்று அநாவசியமான பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கு முயற்சித்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வற் வரி திருத்தச் சட்டமூலம் நேற்று (10) காலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும், கோரமின்மையால் இது தொடர்பான விவாதம் இடைநடுவே நிறுத்தப்பட்டதுடன் பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் இன்று (11) காலை 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டது.

மூலம் - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image