எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீடு முறை நீக்கம்

எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீடு முறை நீக்கம்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR குறியீடு முறை இன்று (01) முதல் நீக்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று (31) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, ஒரு லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 361 ரூபா.

ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 42 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 417 ரூபா.

இதேவேளை, ஓட்டோ டீசல் விலை 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 341 ரூபா.

சுப்பர் டீசல் 1 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 359 ரூபா. 

மண்ணெண்ணெய் விலையும் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 231 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image