"தேசிய எதிர்ப்பு நாள்" 70 வைத்தியசாலைகளுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

"தேசிய எதிர்ப்பு நாள்" 70 வைத்தியசாலைகளுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றைய (22) நாளை தேசிய எதிர்ப்பு நாளாக அறிவித்துள்ளன.

இதற்கமைய இன்று மதியம் 12 மணிமுதல்  1 மணிவரை நாட்டில் உள்ள 70 பிரதான அரச வைத்தியசாலைகளுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் நேற்று (21) கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் அறிவித்துள்ளன.

உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்வதை நிறுத்துங்கள்!
 
மருந்துகள், மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்கவும்!
 
உயர்த்தப்பட்ட வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கவும்!
 
வாழ்வது கஷ்டம், உடனே தகுந்த உதவித் தொகை கொடு!
 
பணியாளர் பற்றாக்குறையை உடனடியாக தீர்க்கவும்!
 
சுகாதார சேவையை விற்பனை செய்யும் அரசின் திட்டத்தை உடனடியாக வாபஸ் பெறு!
 
சுகாதாரத்துறைக்கு போதிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும். ஊழல் மோசடிகளை நிறுத்து!
 
ஆகிய கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதிலும் உள்ள 70 பிரதான வைத்தியசாலைகளில் நண்பகல் 12 மணிக்கு தேசிய கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என அகில இலங்கை சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் சமந்த கோரளே ஆராச்சி தெரிவித்துள்ளார்.
 
இதில் வைத்தியர்கள், தாதியர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image