குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு வாடகை அறவிடுவது இடைநிறுத்தம்
மாடி வீடுகளில் குடியிருக்கும் குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு வாடகை அறவிடுவதை இடைநிறுத்தி, அந்த வீடுகளின் உரித்துரிமையை அவர்களுக்கே வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள மாடி வீடுகளுக்கு, அந்த கட்டணம் அறவிடப்படுவதை இடைநிறுத்தி, அதற்கான உரிமையை அவர்களுக்கே வழங்க 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, நகர அபிவிருத்தி அதிகார சபை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றினால் வழங்கப்பட்டுள்ள வீடுகள் அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன.