5 கோரிக்கைகளை முன்வைத்து துறைமுக ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

5 கோரிக்கைகளை முன்வைத்து துறைமுக ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை
5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து துறைமுக தொழிற்சங்க ஊழியர்கள் நாளைய (28) தினம் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.  
 
துறைமுக தொழிற்சங்க ஒன்றியம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. வாழ முடியாது என்ற போராட்டக் கோசத்துடன் இந்த சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.
 
* 2024 - 2026 சம்பள அதிகரிப்பு  உடனடியாக வழங்க வேண்டும்.
 
* சம்பள பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும்.
 
* வீட்டு வாடகையை குறைக்க வேண்டும்.
 
* போனஸ் கொடுப்பனவை குறைப்பதை நிறுத்த வேண்டும்.
 
* வரி விதிப்பை குறைக்க வேண்டும்.
 
முதலாள ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
இதற்கமைய 28ஆம் திகதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக துறைமுக தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது.
 
இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் பிரதான போராட்டம் கொழும்பில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக மதியம் 12 மணிக்கு இடம்பெற உள்ளதாக துறைமுக தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது.
 
5Port_protest.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image