சிறந்த ஊடக கலாசாரத்தை உருவாக்குவதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு - வெகுஜன ஊடக அமைச்சர்

சிறந்த ஊடக கலாசாரத்தை உருவாக்குவதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு - வெகுஜன ஊடக அமைச்சர்

நாட்டில் சிறந்ததொரு ஊடக கலாசாரத்தை உருவாக்குவதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என வெகுஜன ஊடக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அத்துடன், அரசியலமைப்பின் ஒன்பதாவது சரத்திற்கு இணங்க பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு புதிய அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் வெகுஜன ஊடக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

வெகுஜன ஊடக அமைச்சில் நேற்று (25) தமது அமைச்சுப் பொறுப்பை ஆரம்பிக்கும் நிகழ்வின் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

அவ்வாறே ஏனைய சகல சமயங்களையும் பின்பற்றுவதற்கான உரிமை மற்றும் அவற்றை சுதந்திரமாகப் பாதுகாப்பதும் தமது பொறுப்பாகும் என சுட்டிக்காட்டிய அமைச்சர்; சமய ஒருமைப்பாடு, தேசிய ஐக்கியத்தைக் கட்டி எழுப்புவதற்கும், இந்த நாட்டின் சிறந்ததொரு அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கே புதிய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதற்காக ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் ஒரு கூட்டு முயற்சியாக இந்த இலக்கை அடையும் நோக்கில் அவசியமான ஊடகக் கடமைகளை மேற்கொள்வதற்காக தேவையான தலையீட்டை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் விபரித்தார்.

அமைச்சர் விஜித ஹேரத்திற்கு வெகுஜன ஊடக அமைச்சுக்கு மேலதிகமாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாட்டு சமூக பாதுகாப்பு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு என்பவற்றுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு என பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image