அனைத்து சேவைகளிலிருந்தும் விலகி முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க போராட்டத்தை இன்றைய தினமும் தொடர்வதற்கு கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
தங்களது கோரிக்கை தொடர்பில் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கம் பேச்சுவார்த்தையை நடத்தியது.
அந்த பேச்சுவார்த்தையில் எந்தவித இணக்கப்பாடும் எட்டப்படாத நிலையில் இன்றும் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்ததாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள புதிய சேவை யாப்பை இரத்து செய்யாவிட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சேவை யாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துஇ சகல நடவடிக்கைகளிலும் இருந்து விலகி நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் நேற்றும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.