பெண்களின் வலுவூட்டல் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

பெண்களின் வலுவூட்டல் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்
பெண்களின் வலுவூட்டல் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது

 பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் கடந்த வியாழக்கிழமை (20) பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

2024 மே மாதம் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விதத்தின் ஒத்திவைக்கப்பட்ட இரண்டாவது நாள் விவாதம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றதுடன், இது 04ஆம் திகதி விவாதிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
 
இந்நாட்டிலுள்ள பெண்களை வலவூட்டும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தின் ஊடாக பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
பெண்கள் பற்றிய வலுவூட்டலுக்கு ஏற்பாடு செய்வதற்கும், பெண்களின் முன்னேற்றம் மற்றும் வலுவூட்டல் மீதான தேசியக் கொள்கையை வகுத்தமைப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பொறிமுறைகளைத் தாபிப்பதற்கும் மற்றும் அத்தகைய உரிமைகளின் மீறுகைகளுக்கு எதிராகக் குற்றவழக்குத் தொடுப்பதற்கும், அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது இடைநேர்விளைவான கருமங்களுக்கும் இச்சட்டமூலத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு மற்றும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாக இச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டிருந்தது.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image