பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பை இன்று(15) முதல் மேலும் வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று முதல் அனைத்து அத்தியாவசிய சேவைகளிலிருந்தும் விலகி தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது.
அதன் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த இன்று(14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
வேதனம் தொடர்பான முரண்பாடுகளை தீர்த்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 2ஆம் திகதி முதல் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கிணங்க, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு 14ஆவது நாளாக இன்று முன்னெடுக்கப்படுகின்றது.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கை தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படாமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார்.