தமிழ், சிங்கள புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகை ஆகிய நீண்ட வார விடுமுறை நாட்களை முன்னிட்டு நாடு முழுவதும் தபால் மூலமான பொருட்களை விநியோகிப்பதற்கான விசேட சேவையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை தபால் திணைக்களம் ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக தபால் மாஅதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ எம்.ஆர்.பி சத்குமார விடுத்துள்ள அறிக்கையில், அரச பொது விடுமுறை நாளான ஏப்ரல் 12 ஆம் திகதி, நாடு முழுவதுமுள்ள தபால்/உப தபால் அலுவலகங்கள் மூலம் விசேட சேவை Cash-on-Delivery, வெளிநாட்டுபொதிகள் சேவை மற்றும் பொது பார்சல் விநியோகத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மூலம் - தினகரன்