சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானம்

சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானம்

நாட்டினுள் போலி வைத்தியர்கள் மற்றும் போலி வைத்திய நிலையங்கள் தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

போலி வைத்தியர்கள் மற்றும் மருத்துவ நிலையங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவர்கள் மருத்துவ சபையில் பதிவு செய்திருக்க வேண்டும் என்பதோடு  தனியார் மருத்துவ நிறுவனங்கள் மாகாண மட்டத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் பதிவு செய்யப்படாத வைத்தியர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் பல இருப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறான வைத்தியர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களை உடனடியாக தேடி விசாரணை செய்யுமாறு மாகாண மற்றும் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ்வாறான நிறுவனங்கள் மற்றும் வைத்தியர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

தகுதியற்ற போலி வைத்தியர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மூலம் - அததெரண தமிழ்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image