இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் ‘பாரத் – லங்கா’ வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து நிகழ்நிலை மூலம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
பாரத்-லங்கா வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் 10 மாவட்டங்களில், 45 தோட்டங்களில், 1300 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டும் வகையில் நேற்று (19) நிகழ்நிலை ஊடாக நினைவுப் பலகை திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கை இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் இணைந்து கொண்டனர்.