சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பு

சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பு

பொருளாதார நீதியை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட  குழுவுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக சுகாதார தொழில் வல்லுநர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

 
இதன் காரணமாக நாளை (13) காலை 6.30 மணிமுதல் அனைத்து சுகாதார ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
 
சுகாதார ஊழியர்களுக்கு பொருளாதார நீதியை வழங்குவதற்கு நியமிக்கப்பட்ட குழுவிற்கு போதுமான அதிகாரம் இல்லை என்று தோன்றுகிறது. பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதியின் தலையீட்டை எதிர்பார்க்கப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை காலை 6.30 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image