நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் குறைபாடுகள் உள்ளன: திருத்தங்களை முன்வையுங்கள் - நீதியமைச்சர்

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் குறைபாடுகள் உள்ளன: திருத்தங்களை முன்வையுங்கள் - நீதியமைச்சர்
நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் குறைபாடுகள் உள்ளன. அவசியமான திருத்தங்களை முன்வையுங்கள். அது குறித்து கலந்துரையாடுவோம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
 
நேற்று (08) பாராளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட எதிர்க்கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது நீதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
நிகழ்நிலை காப்பு சட்டத்தில் குறைபாடுகள் உள்ளன.   பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்று தொடர்பில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்குமாயின் அதற்கு அப்பால் சென்று திருத்தங்களை மேற்கொள்ள முடியாது . அந்த உள்ளடக்கங்களுக்கு அமையவே திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.
 
இதற்கமைய குறித்த சட்டமூலம் அவசியமான திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட பின்னர் அது குறித்து கேள்வி எழுப்ப உயர்நீதிமன்றத்திற்கும் உரிமையில்லை. இந்த சட்டம் தொடர்பில் இருக்கின்ற விமர்சனங்களின் அடிப்படையில் எந்த தரப்பினருடனும் பேச்சு நடத்த தயார்.
 
இந்தச் சட்டத்தில் குறைபாடுகள் உள்ளன. நாமும் சிலவற்றை அவதானித்திருக்கின்றோம். எனவே, நாம் வெளிப்படையாக இருக்கின்றோம். இதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை முன்வையுங்கள். நாம் பாராளுமன்றத்தில் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்போம். அதை விடுத்து இந்த சட்டம் தவறானது எனக் கூறி அதை தீயிலிட முடியாது என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image