தொழில் அமைச்சருக்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

தொழில் அமைச்சருக்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

வெளிநாட்டு பணியாளர்களின் பிரதிநிதிகள் சங்கத்திற்கும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் (19) நடைபெற்றது .

 
இது தொடர்பில் தொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
 
இங்கு வெளிநாட்டில் பணிபுரிந்து மீண்டும் நாடு திரும்பும் தொழிலாளர்களை அறிவுறுத்தும் வேலைத்திட்டத்தை ஏற்படுத்துமாறு பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
 
தற்போது நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டம் தொடர்பில் அமைச்சர் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதற்கமைய, தற்பொழுது கிராம சேவர்கள் பிரிவு மட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அறிவுறுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் வேலை திட்டத்தை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
 
மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வதன் மூலம் பல விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் செயற்படுத்தப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.
 
கிராம சேவகர் பிரிவுகளில் நலன்புரிச் சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் அனுராதபுரத்திலருந்து ஆரம்பிக்கப்பட்டு நாடுபூராவும் செயற்படுத்தப்படவுள்ள இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தில் சங்ககளுக்கும் இணைந்து கொள்ள முடியும் என தெரிவித்தார்.
 
சுற்றுலா விசாவில் வேலைக்கு செல்வது சட்டவிரோதமானது என்பதை சமூகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்பதால் , அது குறித்து தங்கள் உறுப்பினர்களுக்கு தெரிவிக்குமாரும் பிரதிநிதிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
 
நாடு திரும்பும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், வடமாகாண மத்திய நிலையத்தை கிளிநொச்சியில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image