மின்சார சபை ஊழியர்கள் தொடர்பில் அமைச்சர் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

மின்சார சபை ஊழியர்கள் தொடர்பில் அமைச்சர் விடுத்துள்ள அதிரடி உத்தரவு
சேவைகளுக்கு இடையூறு விளைவிப்பது அல்லது இலங்கை மின்சார சபை முகாமைத்துவத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை மீறும் வகையில் செயற்படும் எந்தவொரு ஊழியரையும் பணி இடைநிறுத்தவும் மற்றும் உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை மின்சார சபைக்கு முகாமைத்துவத்துக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
 ட்விட்டர் தளத்தில் அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
 
இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் நேற்று (02) முதல் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.
 
இது தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
 
மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக இன்று (03) முதல் 3 நாட்களுக்கு தொடர் போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய, மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் நேற்று (02) முதல் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.
 
மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவையாக மாறியுள்ள நிலையில் சேவை தேவைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர டி சில்வா தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அவசர தேவைகளுக்காக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் ஒப்புதலுடன் மட்டுமே ஊழியர்கள் விடுமுறையை எடுக்க முடியும் என்று இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image