வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களில் வடக்கு இளைஞர்களுக்கு முன்னுரிமை

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களில் வடக்கு இளைஞர்களுக்கு முன்னுரிமை

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் வடக்கு இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 
இது தொடர்பில் விரைவில் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன், பேச்சு வார்த்தை ஒன்றை நடத்தப் போவதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.
 
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வெளி விவகார அமைச்சு மற்றும் தொழில், வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சுகள் மீதான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி செல்வம் அடைக்கலநாதன் முன்வைத்த விடயத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி
 
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அங்குள்ள இளைஞர்கள் முறையான தொழில் வாய்ப்பு இல்லாததால் போதை வஸ்துக்கு அடிமையாகியும் மோசமான வழிகளிலும் செல்கின்றார்கள். அவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
 
இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே தொழிலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அமைச்சர் மனுஷ நாணயக்கார இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
 
தமிழ் மொழி மூலம் கடந்த அக்டோபர் மாதம் வரை 7056 பேருக்கு, நாம் பயிற்சிகளை வழங்கியுள்ளோம்.
 
அதேவேளை வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விசேட பேச்சு வார்த்தையை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இதற்கான முக்கிய பொறுப்புகளை எனது இராஜாங்க அமைச்சருக்கு வழங்கியுள்ளேன்.
 
இக்காலங்களில் நாம் இஸ்ரேலுக்கு வேலை வாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
 
அங்கு நிர்மாண த்துறை வேலை வாய்ப்புகள் பாரிய அளவில் காணப்படுகின்றன. அந்த நடவடிக்கைகளின் போது வடக்கிற்கு முன்னுரிமையளிக்கப்படும். -  என்றார்
 
மூலம் - தினகரன்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image