அரச ஊழியர்களைப் போன்று தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்த வேலைத்திட்டம்

அரச ஊழியர்களைப் போன்று தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்த வேலைத்திட்டம்

16 இலட்சம் அரச துறை ஊழியர்களையும் 80 இலட்சம் தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தின் வெற்றியின் ஊடாக எதிர்காலத்தில் மின்சாரம், எரிவாயு மற்றும் எரிபொருளின் விலைகளை குறைத்து, மக்களுக்கு சிறந்த பொருளாதாரத்தை உருவாக்க முடியும் எனவும், இந்த வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக் கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன,

“பதினாறு இலட்சம் பேருக்கும் அதிகமாக உள்ள அரச பொறிமுறையை வரவு செலவுத் திட்டத்துடன் பொருத்துவதில், வங்குரோத்தான நாட்டின் எதிர்கால இலக்குகளை எவ்வாறு அடைவது என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதி தேசிய சபையை நியமித்துள்ளார். அந்த இடத்தில் தேசிய பிரச்சினைகளை முன்வைக்கும் திறன் அனைவருக்கும் உண்டு. பழைய முறைகளில் அரசியல் செய்ய முடியாது என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் நினைவில் கொள்ள வேண்டும். இப்போது வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தையும் ஸ்தாபித்துள்ளோம். இலங்கையில் உள்ள எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சிவில் சமூகமோ தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு மேலதிகமாக வேறு ஏதேனும் வழிமுறைகள் இருந்தால் அந்த விடயங்களை அந்த அலுவலகத்தில் முன்வைக்க முடியும். ஒவ்வொரு துறையையும் வலுப்படுத்த புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

எனவே முழு அரச பொறிமுறையின் அனைவரும் மிகவும் அவதானமாக, எதிர்காலத்தில் பாரிய மாற்றத்தை வேண்டியுள்ள அரச பொறிமுறையை பலப்படுத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கும் பிரகாரம் முழுமையான அரச ஊழியர்களைப் பாதுகாக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.” என்று பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image