முறைசாரா சேவையில் ஈடுபடுவோருக்கான 'கரு சரு' வேலைத்திட்டம் ஆரம்பம்
முறைசாரா சேவையில் ஈடுபட்டுள்ளோரின் தொழில் கௌரவத்தை மேம்படுத்துவதற்கான 'கரு சரு' என்ற வேலைத்திட்டத்திற்கு பொது மக்ககளின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்ைக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இாற்கான தொடர் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வு நேற்று (01) ,தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைர்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இடம்பெற்றது.
அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் எண்ணக்கருவுக்கு அமைவாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, முறைசாரா சேவையில் ஈடுபட்டுள்ளோரின் தொழில் கௌரவத்தை மேம்படுத்துவதற்காக 'கரு சரு' என்ற வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
'கரு சரு” வை ஏற்பாடு செய்யும் போது தனியார் பஸ் சாரதி, பஸ் நடத்துனர், ஏனைய பிரிவு போக்குவரத்து சாரதிகள் கட்டுமான பொறியாளர் ,கட்டுமான பொறியாளர் உதவியாளர் வீட்டு மனை பெண் சேவை,அலங்கார கலைஞர், சுய தொழிலில் ஈடுபட்டுள்ளோர் ஆகியோரின் தொழில் கௌவத்தையும், பாதுகாப்பையும் தொழில் ரீதியாக வரவேற்கப்படுவதையும் மேம்படுத்தப்பட வேண்டும்.
இது தொடர்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர் கலந்துரையாடலுக்கு சமூகத்தினரதும் மற்றும் முறைசாரா மற்றும் பல்வேறு பிரிவுகளில் தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை முன்வைக்க முடியும்.