அதிகரிக்கப்பட்டிருக்கும் சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சை கட்டணத்தை இடை நிறுத்தவும் - எதிர்க்கட்சித் தலைவர்
சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சை கட்டணம் நூற்றுக்கு 257 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் பெற்றோர்கள் கடும் கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.
அதனால் அதிகரிக்கப்பட்டுள்ள பரீட்சை கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணங்களை உனடியாக இடை நிறுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) கருத்து வௌியிட்டபோது இதனைத் தெரிவித்த அவர், மேலும் தெரிவிக்கையில்,
சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சை கட்டணம் நூற்றுக்கு 257 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் பெற்றோர்கள் கடும் கஷ்டத்துக்கும் அசெளகரியங்களுக்கும் ஆளாகியுள்ளனர்.
அதன் பிரகாரம் முதலாம் வருட மாணவர்களுக்கு 67500 செலுத்தவேண்டி இருக்கிறது. இது பாரிய பிரச்சினை. இதனை செலுத்த முடியாமல் 40000 மற்றும் 27500 என இரண்டு தவணைக்கு பிரித்து இருக்கிறது.
27500 ரூபாவை செலுத்த முடியாமல் 15000, 12500 என்ற அடிப்படையில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் இதனைக்கூட செலுத்த முடியாத நிலைமை இருந்து வருகிறது. அதனால் அதிகரிக்கப்பட்டிருக்கும் பரீட்சை கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணத்தை உடனடியாக இடை நிறுத்தி, பெற்றொர்களுக்கு எற்றுக்கொள்ள முடியுமான கட்டணத்தை அறவிடுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். - என்றார்.
மூலம் - வீரகேசரி