அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு (போனஸ்) வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அனைத்து அரச ஊழியர்களுக்கும் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர், இந்த மாதத்துக்கான கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இதன்படி, அரசாங்கத்தின் பணப்புழக்கத்தில் சுமை சுமத்தினாலும், எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து அரச ஊழியர்களுக்கும் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் சம்பளம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளும் மேற்படி திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள் அரசாங்க சேவை ஆணைக்குழு அரச ஊழியர்களுக்கு விசேட அறிவித்தல்
800 சாரதிகள் மற்றும் 275 நடத்துனர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை
இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை இணைத்தல்: கல்வி அமைச்சின் அறிவித்தல்
கேகாலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இவ்வருட இறுதி காலாண்டுக்குள் அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு (போனஸ்) வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதனை ஜனாதிபதியே பாதீட்டு திட்டத்தில் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.