ஆட்சேர்க்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல் தொடர்பாக அரசாங்கத்தின் அறிவித்தல்
ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிற்சி கொடுப்பனவு மற்றும் சம்பளம் வழங்குவது தொடர்பான அறிவித்தலை பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில், அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணசபைகளின் தலைமை செயலாளர்கள், ஆணைக்குழுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், ஆகியோருக்கு நேற்றையதினம் (19) பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய, குறித்த முறைமையின்கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு 2019 செப்டம்பர் 13ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு அமைவாக இந்த அமைச்சினால் ஏற்பாடுகள் வழங்குதல் 2022.12.31 ஆம் திகதி வரை மட்டுமே என்னால் மேற்கொள்ளப்படும் என்பதை அறியத் தருகின்றேன்.
அரச ஊழியர்களுக்கு வௌிநாட்டு வேலைவாய்ப்பு: வங்கிக் கணக்கு, பணவனுப்பல் தொடர்பான விளக்கம்
அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளைப் தயாரிக்கும்போது உங்கள் நிறுவனத்திற்கு இணைப்பு செய்யப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர், சேவையிலுள்ள உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை உள்ளடக்கி திறைசேரி செயலாளருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.