நாட்டில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு மேலும் ஒரு வாரகாலம் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் வௌ்ளிக்கிழமை (15) வரை அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான பாடசாலை நாட்காட்டியின் அடிப்படையில் எதிர்வரும் ஜூலை 18ஆம் திகதி இரண்டாம் தவணை ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட பாடசாலை நாட்காட்டி 2021/2022
தமிழ், சிங்கள பாடசாலைகள்
தமிழ், சிங்கள புதுவருட விடுமுறை
ஏப்ரல் 08, 2022 - ஏப்ரல் 17, 2022
1ஆம் தவணை - 1ஆம் கட்டம்
ஏப்ரல் 18, 2022 - மே 20, 2022
2021 க.பொ.த. சா/த பரீட்சை விடுமுறை
மே 21, 2022 - ஜூன் 05, 2022
1ஆம் தவணை - 2ஆம் கட்டம்
ஜூன் 06, 2022 - ஜூலை 08, 2022
2ஆம் தவணை
ஜூலை 18, 2022 - செப்டெம்பர் 16, 2022
3ஆம் தவணை - 1ஆம் கட்டம்
செப்டெம்பர் 19, 2022 - ஒக்டோபர் 13, 2022
2022 க.பொ.த. உ/த பரீட்சை விடுமுறை
ஒக்டோபர் 14, 2022 - நவம்பர் 13, 2022
3ஆம் தவணை - 2ஆம் கட்டம்
நவம்பர் 14, 2022 - டிசம்பர் 23, 2022
முஸ்லிம் பாடசாலைகள் பாடசாலை நாட்கள்/விடுமுறை - 2021/2022
1ஆம் தவணை - 1ஆம் கட்டம்
மே 04, 2022 - மே 20, 2022
2021 க.பொ.த. சா/த பரீட்சை விடுமுறை
மே 21, 2022 - ஜூன் 05, 2022
1ஆம் தவணை - 1ஆம் கட்டம்
ஜூன் 06, 2022 - ஜூலை 07, 2022
2ஆம் தவணை
ஜூலை 07, 2022 - செப்டெம்பர் 16, 2022
3ஆம் தவணை - 1ஆம் கட்டம்
செப்டெம்பர் 19, 2022 - ஒக்டோபர் 13, 2022
விடுமுறை
ஒக்டோபர் 14, 2022 - ஒக்டோபர் 26, 2022
3ஆம் தவணை - 2ஆம் கட்டம்
ஒக்டோபர் 27, 2022 - டிசம்பர் 23, 2022