அரச உத்தியோகத்தர்களினால் சமூக வலைத்தளங்கள் மூலம் அரசாங்கத்தையும் மற்றும் அரசாங்கத்தின் கொள்கையையும் விமர்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோனினால். அபிவிருத்தி உத்தியோகத்தர் (அனர்த்த உதவி சேவை) எம்.ஆர். ஜயசிங்கவுக்கு கடிதம் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உங்களால் உங்களதுபேஸ்புக் கணக்கில் வௌியிட்ட பதிவு தொடர்பாக
உள்நாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சின் செயலாளரினால் HAF/INV/AD,SE/01/03/11 மற்றும் 2021.11.11 ஆம் திகதி கடிதத்தின் அடிப்படையில் அரச உத்தியோகத்தர்களினால் சமூக வலைத்தளங்கள் மூலம் அரசாங்கத்தையும் மற்றும் அரசாங்கத்தின் கொள்கையையும் விமர்சிக்காதிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, இதனைத் தொடர்ந்தும் சமூக வலைத்தளங்களைப்பயன்படுத்தி அரச சேவையை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் செயற்படாதிருக்கவும். அரசாங்கத்தையும், அரசாங்கத்தின் கொள்கையையும் விமர்சிக்காதிருக்குமாறு இதன் ஊடாக உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனை தொடர்ந்தும் நீங்கள் அவ்வாறு செயற்படுவீர்களாயின், தாபன விதிக்கோவை XLVII பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
2 ஆண்டு கால இடைவெளிக்கு பின் மீண்டும் ஆசிரியர் இடமாற்றங்கள்
ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பம் கோரல்